அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும், பொதுச் செயலாளர் தேர்தலுக்கு எதிராகவும்
மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இது தொடர்பான விசாரணை நடைபெற்றது. இன்று இந்த வழக்கின் தீர்ப்பு வெளியானது.
அந்தவகையில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதன் மூலம் அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது செல்லும்.
அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் முடிவை அறிவிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டதால் அதற்கான அறிவிப்பையும் அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
அதிமுக தலைமைக் கழகமான எம்ஜிஆர் மாளிகையில் தேர்தல் பொறுப்பாளர்கள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் எடப்ப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறி அதற்கான வெற்றிச் சான்றிதழை வழங்கினர்.
பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதால் அவரது ஆதரவாளர்கள், அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து, கேக் வெட்டி, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னாள் அமைச்சர்கள் பலரும் எடப்பாடி பழனிசாமிக்கு பூங்கொத்துகள் கொடுத்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஓ.பன்னீர் செல்வம் தரப்பு இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் மேல்முறையீடு செய்யலாம் என்றும் நாளையே அந்த விசாரணை மூத்த நீதிபதிகள் மகாதேவன், முகமது சஃபீக் அமர்வில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.