மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவிற்கு ஆட்களை சட்டவிரோதமாக அழைத்து செல்லும் கும்பலைச் சேர்ந்த ஒருவனால், ஆற்றோரம் விட்டுச்செல்லப்பட்ட குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.
ஒவ்வொரு மாதமும், 2 லட்சம் பேர் மெக்சிகோ வழியாக அமெரிக்காவிற்குள் ஊடுருவ முயன்றுவருகின்றனர். கடத்தல்காரன் ஒருவன், அமெரிக்க எல்லை அருகே, கொலரடோ ஆற்றோரத்தில் ஒரு வயது சிறுவனை விட்டுவிட்டு, அதே ஆறு வழியாகவே மெக்சிகோவிற்கு நீந்திச்சென்றான்.
தட்டுதடுமாறி எழுந்து நடக்கத்தொடங்கிய சிறுவன் ஆற்றில் தவறி விழ இருந்த நிலையில், காரில் அங்கு விரைந்த அமெரிக்க பாதுகாப்பு படை வீரர், சிறுவனை மீட்டார்.