அவுஸ்திரேலியாவில் பொழுதுபோக்கிற்காக மெட்டல் டிடெக்டரை பயன்படுத்திய நபருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்!


அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் பொழுதுபோக்கிற்காக மெட்டல் டிடெக்டரை பயன்படுத்திய நபருக்கு அதிர்ஷ்டவசமாக மிகப்பெரிய தங்கப் பாறை கிடைத்துள்ளது.

மெட்டல் டிடெக்டரிஸ்டுகள்

ஒரு மெட்டல் டிடெக்டரிஸ்ட் வேலை என்பது மெட்டல் டிடெக்டரைப் பயன்படுத்தி தரையில் உள்ள மதிப்புமிக்க உலோகப் பொருட்களைக் கண்டறிவதாகும்.

மெட்டல் டிடெக்டர் என்பது நிலத்தில் புதைந்துள்ள பொருட்களைக் கண்டறியக்கூடிய ஒரு சிறப்பு உபகரணமாகும். புதைக்கப்பட்ட உலோகப் பொருட்களைக் குறிக்க மின்காந்தக் அலைகளை பயன்படுத்துகிறது.

மெட்டல் டிடெக்டரிஸ்டுகள் பல்வேறு வகையான நிலங்களை ஆராய்வதால், அவர்களின் வேலையில் சிறந்து விளங்குகிறார்கள். ஆனால் சில நேரங்களில், அனுபவம் வாய்ந்தவர்கள் தங்கள் முழு வாழ்க்கையிலும் முடியாத மதிப்புமிக்க பொருட்களை சில தொழிமுறையற்ற அல்லது பொழுபோக்கு டிடெக்டரிஸ்டுகள் கண்டுபிடிக்க முடிகிறது.

அவுஸ்திரேலியாவில் பொழுதுபோக்கிற்காக மெட்டல் டிடெக்டரை பயன்படுத்திய நபருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்! | Australia Amateur Metal Detectorist Huge Gold Rock@Nine

பட்ஜெட் டிடெக்டரால் அடித்த அதிர்ஷ்டம்

விக்டோரியா மாகாணத்தின் தங்க முக்கோணத்தில் ஒரு பட்ஜெட் டிடெக்டரைப் பயன்படுத்திய அவுஸ்திரேலிய டிடெக்டரிஸ்டுக்கு அப்படி ஒரு அதிர்ஷ்டம் சமீபத்தில் நடந்தது.

பெயர் வெளியிட விரும்பாத அந்த நபர், விக்டோரியாவின் தங்கவயல்களில் தனது Minelab Equinox 800 எந்திரத்தை பயன்படுத்தினார். அப்போது ​​அவர் ஏதோ ஒரு பாரிய உலோகத்தை கண்டுபிடித்ததை அறிந்தார்.

அங்கு கொஞ்சமாக தோண்டி எடுத்த பிறகு, 4.6 கிலோ எடையுள்ள ஒரு கட்டியைக் கண்டுபிடித்தார். அதில் பாதி தங்கம் என்று அவருக்கு தெரியவில்லை. அதன் மதிப்பை அறிய ஜீலாங்கிற்கு கொண்டு சென்றார்

எதிர்பார்த்ததை விட 20 மடங்கு அதிக மதிப்பு

ஆரம்பத்தில் $10,000 இருக்கும் என்று நினைத்தார். ஆனால் தங்க மதிப்பீட்டாளர்கள் அவர் எதிர்பார்த்ததை விட 20 மடங்கு அதிக மதிப்புடையது என்று கூறினார்.

இந்த மாதிரியை மதிப்பிட்டு வாங்கிய தங்க வியாபாரி டேரன் காம்ப், இது தனது 43 ஆண்டுகால வாழ்க்கையில் பார்த்த மிகப்பெரிய கட்டி என்று கூறினார்.

அவுஸ்திரேலியாவில் பொழுதுபோக்கிற்காக மெட்டல் டிடெக்டரை பயன்படுத்திய நபருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்! | Australia Amateur Metal Detectorist Huge Gold Rock@Nine

2.6 கிலோ தங்கம்- 8 கோடி மதிப்பு

தங்க வர்த்தக நிறுவனம் நடத்திய சோதனையில் 4.6 கிலோ எடையுள்ள பாறையில் 2.6 கிலோ தங்கம் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு இலங்கை ரூபாயில் கிட்டத்தட்ட 8 கோடி என கூறப்படுகிறது.

விக்டோரியாவின் கோல்டன்ஃபீல்ட்ஸ் பகுதி, கோல்டன் முக்கோணம் என்றும் அழைக்கப்படுகிறது, இது வட மத்திய விக்டோரியாவின் ஒரு குறிப்பிட்ட பகுதியை எடுத்துக்கொள்கிறது.

விக்டோரியாவின் வரலாற்றில் சுமார் 1851 மற்றும் 1860-களின் பிற்பகுதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியான விக்டோரியன் கோல்ட் ரஷ் உடன் இப்பகுதி வலுவான தொடர்பைக் கொண்டுள்ளது, இது அவுஸ்திரேலிய காலனிக்கு அதீத செழிப்புக்கு வழிவகுத்தது மற்றும் மெல்போர்னுக்கான மக்கள்தொகை வளர்ச்சி மற்றும் நிதி மூலதனத்தின் வருகைக்கு வழிவகுத்தது.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.