சென்னை: இந்தியாவில் 18 மருந்துதயாரிப்பு நிறுவனங்களின் உரிமத்தை ரத்துசெய்து மருந்து கட்டுபாட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. போலி மருந்து உற்பத்தி செய்த மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 20 மாநிலங்களில் 76 நிறுவனங்களை ஆய்வு செய்ததை தொடர்ந்து இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
