இந்திய நீதிமன்றங்களில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் வழக்கை அமெரிக்கா கவனித்து வருகிறது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை முதன்மை துணை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் தெரிவித்துள்ளார். “சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறை சுதந்திரத்திற்கு மதிப்பளிப்பது எந்தவொரு ஜனநாயக நாட்டின் அடிப்படையாகும், மேலும், இந்திய நீதிமன்றங்களில் காந்தி (ராகுல் காந்தி) வழக்கை நாங்கள் கவனித்து வருகிறோம்,” என்று ராகுல் காந்தி எம்.பி. பதவியில் நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான செய்தியாளர் கேள்விக்கு அவர் பதிலளித்தார். “கருத்து சுதந்திரம் உள்ளிட்ட […]