உளவியல் பாதிப்புக்கான சிகிச்சையில் இருந்து வந்த போதும் நாஷ்வில் பாடசாலை தாக்குதல்தாரி சட்டப்பூர்வமாக 7 கனரக துப்பாக்கிகளை வாங்கியுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மூன்று துப்பாக்கிகளை பயன்படுத்தி
28 வயதான ஆட்ரி ஹேல் வெவ்வேறு 5 துப்பாக்கி விற்பனை கடைகளில் இருந்து மொத்தம் 7 துப்பாக்கிகளை வாங்கியுள்ளார்.
இதில் மூன்று துப்பாக்கிகளை பயன்படுத்தி திங்களன்று Covenant பாடசாலையில் கண்மூடித்தனமான தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.
@AP
குறித்த தாக்குதலில் 6 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். உளவியல் சிகிச்சையில் இருந்துவந்த ஹேல், கனரக துப்பாக்கிகளை வாங்கியுள்ளது முதற்கட்ட விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
மேலும், ஹேல் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் விவகாரம் சட்ட அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றே கூறுகின்றனர்.
மட்டுமின்றி, தாக்குதல்தாரியிடம் துப்பாக்கி எதுவும் இல்லை என்றே அவரது பெற்றோரும் நம்பியிருந்துள்ளனர்.
Credit: Linkedin
அவரிடம் 7 துப்பாக்கிகள் இருப்பது பெற்றோருக்கு தெரியவில்லை என்றே பொலிசார் தற்போது தெரிவிக்கின்றனர்.
பெற்றோரின் பார்வையில் இருந்து ஹேல் துப்பாக்கிகளை மறைத்து வைத்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.
சந்தேகம் எதுவும் ஏற்படவில்லை
Covenant பாடசாலையில் தாக்குதல் முன்னெடுத்த ஹேல் மொத்தம் மூன்று துப்பாக்கிகளை பயன்படுத்தியுள்ளதை பொலிசார் உறுதி செய்துள்ளனர்.
சம்பவத்தின்போது சிவப்பு நிற பை ஒன்றுடன் ஹேல் வெளியேறியதாகவும், அவரிடம் துப்பாக்கி எதுவும் இல்லை என்பதை நம்பியதால், வேறு சந்தேகம் எதுவும் ஏற்படவில்லை என பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
@getty
பாடசாலைக்குள் புகுந்து கண்மூடித்தனமான இந்த தாக்குதலின் நோக்கம் என்ன என்பது குறித்து பொலிசார் விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.
Covenant பாடசாலை மட்டுமின்றி, அருகாமையில் உள்ள தேவாலயமும் தாக்குதல்தாரியின் இலக்காக இருந்திருக்கலாம் என்றே பொலிசார் நம்புகின்றனர்.
ஹேல் பெண் என்றே முதலில் பொலிசார் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தனர். ஆனால் அவர் திருநங்கை எனவும் பின்னர் விளக்கமளித்துள்ளனர்.