சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் திருவிழா கோலம் பூண்டுள்ளது. அதற்கு முக்கிய காரணம் இரண்டு விஷயங்கள். ஒன்று, அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலுக்கு எதிரான வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்துள்ளது. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு பிறப்பித்த உத்தரவில்,
தரப்பு தாக்கல் செய்த அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன.
அதிமுகவினர் உற்சாகம்
ஜூலை 11 அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லுபடியாகும் என குறிப்பிட்டுள்ளது. இரண்டாவது, அதிமுகவின் பொதுச் செயலாளராக
போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையொட்டி வாழ்த்து தெரிவிக்க எம்.எல்.ஏக்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் தலைமை அலுவலகத்தில் குவிந்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டங்கள் களைகட்டி உள்ளன.
எம்.ஜி.ஆர் கெட்டப்
தலைமை செயலகத்தில் எடப்பாடியை சந்தித்த தொண்டர்கள் சிலர், அவருக்கு எம்.ஜி.ஆரை போல வெள்ளை நிற தொப்பி மற்றும் கண்ணாடியை அணிவித்து மகிழ்ந்தனர். இதுதொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த சூழலில் எடப்பாடி பழனிசாமி அடுத்த எம்.ஜி.ஆரா? என்ற கேள்வி எழுகிறது. எம்.ஜி.ஆரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது எனக் கூறலாம்.
எடப்பாடியின் அரசியல்
அதேசமயம் அவரது ஸ்டைலை பின்பற்றி அரசியலை முன்னெடுப்பாரா என்ற மில்லியன் டாலர் கேள்வி எழுந்துள்ளது. திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர் நீக்கப்பட்ட போது மிகப்பெரிய அளவில் தொண்டர்கள் அவரது பின்னால் நின்றனர். திரை ஆளுமை தமிழக மக்கள் மத்தியில் மிக உயர்ந்த பிம்பத்தை கட்டமைத்திருந்தது. எனவே ரசிகர்களை தாண்டி மக்கள் மனங்களில் எம்.ஜி.ஆர் வென்றிருந்தார்.
தேர்தல் வெற்றிகள்
இது அவரது கட்சிக்கும், தேர்தல் வெற்றிக்கும் பெரிதும் உதவிகரமாக இருந்தது. 1972ல் கட்சி தொடங்கி அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலுக்காக தீவிரமாக செயல்பட திட்டமிட்டார். ஆனால் அடுத்த ஓராண்டில் முக்கியமான திருப்புமுனை சம்பவங்கள் அரங்கேறின. திண்டுக்கல் மக்களவை தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது. அதில் மாயத்தேவரை நிறுத்தி அதிமுகவிற்கு முதல் வெற்றியை பெற்று தந்தார் எம்.ஜி.ஆர்.
வீழ்த்த முடியாத தலைவர்
அதே ஆண்டில் கோவை மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது. அதில் சி.அரங்கநாயகம் மூலம் இரண்டாவது வெற்றியை பதிவு செய்தார். இந்த வெற்றி 1977, 1980, 1984 என மூன்று சட்டமன்ற தேர்தல்களிலும் தொடர்ந்தது. சாகும் வரை முதல்வராகவே இருந்து பூவுலகை விட்டு பிரிந்து சென்றார். இப்படியான வரலாற்றை எடப்பாடி பழனிசாமி படைப்பாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆர் வாரிசு
அதிமுக பொதுச் செயலாளராக இன்றைய தினம் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கான சவால்களும், அக்னி பரீட்சைகளும் இனிமேல் தொடங்கும் என்பதில் சந்தேகமில்லை. அவற்றை ஒவ்வொன்றாக வென்று காட்டும் போது தனித்துவமிக்க தலைவராக உருவெடுப்பார். எம்.ஜி.ஆரின் வாரிசாக அடையாளம் காணப்படுவார். ஆனால் இன்னொரு எம்.ஜி.ஆராக இருக்க முடியாது என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.