அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் வழக்கு, பொதுச் செயலாளர் தேர்தல் வழக்கு ஆகியவை எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக வந்த நிலையில் இன்று அதிமுக பொதுச் செயலாளாராக அவர் பதவியேற்றுக் கொண்டார்.
எடப்பாடி அணிக்கு அதிர்ச்சி!
இதனால் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்துகளை கூறி வருகின்றனர். ஆனால் உச்ச நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற வழக்கு ஒன்று
மற்றும் அவரது ஆதரவாளரான எஸ்.பி.வேலுமணிக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கு!
கடந்த அதிமுக ஆட்சியில் ஊரக உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி. வேலுமணி சென்னை மாநகராட்சியிலும் கோவை மாநகராட்சியிலும் உள்ள பணிகளுக்கு முறைகேடாக டெண்டர்களை வெளியிட்டதாகவும் வருமானத்திற்கு அதிகமாக சுமார் ரூ.58 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக திமுகவைச் சேர்ந்த ஆர்.எஸ். பாரதியும், அறப்போர் இயக்கமும் புகார் அளித்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வேலுமணிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை ரத்து செய்ய மறுத்தது. அதேவேளையில் டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!
சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்ய முடியாது என்ற உத்தரவுக்கு எதிராக எஸ்.பி.வேலுமணி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதேபோன்று தமிழ்நாடு அரசு தரப்பிலும் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் உச்ச நீமன்றத்தில் நீதிபதி அஜய் ரஸ்தோஹி தலைமையிலான அமர்வில் நேற்று (மார்ச் 27) விசாரணைக்கு வந்தது.
எஸ்.பி.வேலுமணி தரப்பு மறுப்பு!
அப்போது எஸ்.பி.வேலுமணி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், ”இந்த வழக்கு வேண்டுமென்றே அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக பதியப்பட்ட ஒன்றாகும். சொத்து குவிப்பு தொடர்பான எந்த விவரமும் இல்லை” என கூறினார்.
தமிழக அரசு தரப்பு விளக்கம்!
இதற்கு கடும் எதிப்பு தெரிவித்த தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் மற்றும் அரிஸ்டாட்டில், ”எஸ்.பி வேலுமணி மீதான வழக்கு முறையான ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை செய்யப்பட்டு அதனடிப்படையில் பதிவு செய்யப்பட்டது” என தெரிவித்தனர்.
நீதிபதி உத்தரவு!
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையால் தான் எஸ்.பி.வேலு மணி மீது சொத்துக் குவிப்பு வழக்கு பதியப்பட்டது என்ற வாதத்தை ஏற்க மறுப்பதாக தெரிவித்ததோடு, எஸ்.பி.வேலுமணியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.