கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆலம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சவிதா. இவருக்கும் குறிஞ்சிப்பாடி பகுதியைச் சேர்ந்த ராம்குமார் என்பவருக்கும் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில், காவல்துறையில் பணியாற்றி வந்த ராம்குமாருக்கு, தன்னுடன் பணியாற்றி வரும் சக பெண் காவலரான ரம்யா என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அந்த சமயத்தில் ராம்குமார் வீட்டில் இருக்கும் மனைவியை அவரது பெற்றோர் வீட்டில் இருப்பதாக கூறி விவாகரத்து பெற்றுள்ளார்.
இதையடுத்து, ராம்குமாருக்கும், ரம்யாவுக்கும் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருவேங்காட்டில் ஸ்ரீசுவேதாரண்யேசுவரர் சுவாமி திருக்கோயிலில் திருமண ஏற்பாடுகள் நடந்துள்ளது. இதை அறிந்த மனைவி சவிதா, தனது குடும்பத்துடன் திருமணத்தை தடுத்து நிறுத்துவதற்குச் சென்றுள்ளார்.
இதைப்பார்த்த ராம்குமாரும், ரம்யாவும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதைத்தொடர்ந்து, சவிதா மயிலாடுதுறை காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன் படி, போலீசார் தப்பித்துச் சென்ற இருவரையும் கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.