புதுடெல்லி: டெல்லி மதுபான விற்பனை கொள்கை ஊழல் வழக்கில், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகளும், பிஆர்எஸ் கட்சியின் மேல்சபை உறுப்பினரு மான கவிதாவுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.
இவ்வழக்குத் தொடர்பாக அமலாக்கத்துறை கவிதாவிடம் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் கைது நடவடிக்கையிலிருந்து பாதுகாக்கவும், அமலாக்கத் துறையின் தொடர் விசாரணையிலிருந்து விலக்குக் கோரியும் கவிதா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி அஜய் ரஸ்தோகிதலைமையிலான அமர்வு, கவிதாவுக்கு அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையிலிருந்து பாதுகாப்பு வழங்க மறுத்துள்ளது. ஆம் ஆத்மி தலைமையிலான டெல்லி அரசு 2021 ஆண்டு புதிய மதுபானக் கொள்கையை அறிவித்தது. இதன்படி, டெல்லி பல மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, 800-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டது. இந்தக் கொள்கையை நடைமுறைப் படுத்தியதில் ஆதாயம் அடைந்த மது விற்பனையாளர்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ.100 கோடி லஞ்சம் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கில் டெல்லியின் துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கவிதாவுக்கும் தொடர்பு உள்ளதாக. கடந்த 21-ம் தேதி கவிதாவிடம் அமலாக்கத் துறை 10 மணி நேரம் விசாரணை நடத்தியது.
இந்நிலையில் தொடர் விசார ணையில் இருந்து விலக்கு அளிக்கவும், அமலாக்கத் துறை யின் கைது நடவடிக்கை யிலிருந்து பாதுகாப்பு வழங்கவும் கவிதா மனுதாக்கல் செய்தார்.
மேலும், தான் ஒரு பெண் என்பதால் அமலாக்கத் துறை அலுவலகத்தில் வைத்து விசா ரணை நடத்துவதற்குப் பதிலாக தன்னுடைய வீட்டில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டும் என்று அவர் கோரியிருzந்தார். இது தொடர்பான சட்ட வழி களை ஆராய்வதாக கூறிய நீதிமன்றம், மூன்று வாரங்களுக்குப் பிறகு இதை விசாரிப்பதாக தெரிவித்துள்ளது.