கொழும்பில் உள்ள மக்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்


கொழும்பு மாவட்டத்தில் மாரடைப்பினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் இவ்வாறான உயிரிழப்புக்கள் அதிகம் பதிவாகியுள்ளதாக கொழும்பு மாநகர விபத்து மரண விசாரணை அதிகாரி இரேஷா சமரவீர தெரிவித்துள்ளார்.  

கொழும்பு மாநகசபைக்கு உட்பட்ட பகுதிகளில் மாத்திரம் சுமார் 90 சதவீதமான மரணங்கள் மாரடைப்பினால் ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டார். 

உயிரிழப்புகள் அதிகம்

இந்த பகுதிகளில்  ஒவ்வொரு வாரமும் மாரடைப்பு காரணமாக சுமார் பதினைந்து மரணங்கள் பதிவாகுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள மக்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல் | 90 Of Deaths In Colombo Are Due To Heart Attacks

முப்பது முதல் எண்பது வயதுக்குட்பட்டவர்களே பெரும்பாலும் மாரடைப்பால் இறந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் இவ்வாறான உயிரிழப்புகள் அதிகம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், சிறிய மார்பு வலியை அலட்சியம் செய்வதும், எண்ணெய் உணவுகளை சாப்பிடுவதும் அதிக மாரடைப்புக்கு வழிவகுப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கூடுமானவரை அடிக்கடி உடற்பயிற்சி செய்வதில் ஆர்வம் காட்டினால் மாரடைப்பு ஏற்படுவதைத் தவிர்க்கலாம் என்றும் மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.    



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.