ரியாத், சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவிற்குயாத்ரீகர்களுடன் சென்ற பஸ் விபத்துக்கு உள்ளானதில், 20 யாத்ரீகர்கள் பலியாகினர்.
மேற்காசிய நாடான சவுதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் புனித நகரங்களான மெக்கா மற்றும் மதீனாவுக்கு, பல நாடுகளைச் சேர்ந்த யாத்ரீகர்களுடன் பஸ் ஒன்று சென்றது. இங்கு, தெற்கு மாகாணமான ஆசிரில் நகருக்கு பஸ் வந்த போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, பாலத்தின் மீது மோதி கவிழ்ந்தது.
இதைத் தொடர்ந்து பஸ் தீப்பற்றி எரிந்ததில், 20 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்; 29 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, படுகாயம் அடைந்தவர்களை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
பஸ்சில் ‘பிரேக்’ பிடிப்பதில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement