தலையில் ரத்தம் சொட்ட சொட்ட காவல் நிலையத்தை பூட்டி அசல் கோளாறு அட்ராசிட்டி ..! போலீசார் மீது ரத்தத்தை பூசி வம்பு

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் காவல் நிலையத்துக்கு, தலையில் ரத்தம் சொட்ட சொட்ட  வந்த இளைஞர் காவல் நிலைய இரும்பு கேட்டை இழுத்து பூட்டி ரகளை செய்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.  மதுவால் பாதை மாறி காவலர்களின் சட்டையில் ரத்ததை பூசி வம்பிழுத்த சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி..

காவல் நிலையத்த்தின் இரும்பு கேட்டை இழுத்து பூட்டி போலீசாரையே உள்ளே விடாமல் வெளியே தடுத்து நிறுத்தி தனது பவரை காட்டிய அன்பு இவர் தான்..!

தருமபுரி மாவட்டம் கடத்தூரை சேர்ந்தவர் அன்பு .இவர் சென்னையில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஊழியராக பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

வேலை பறிபோனதால் அது முதல் காக்கி சட்டையை பார்த்தாலே வெறி ஏறும் மன நிலைக்கு சென்றுள்ளார். 6 மாதத்துக்கு ஒரு முறை ஊருக்குள் வந்து யாரையாவது அடித்து வம்பு இழுத்து செல்வது வழக்கம் என்று கூறப்படும் நிலையில், மீண்டும் ஊருக்குள் வந்து வம்பிழுத்ததால் தலையில் வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது.

தலையில் ரத்தம் சொட்ட சொட்ட கடத்தூர் காவல் நிலையத்திற்கு சென்ற அரைடவுசர் அன்பு போலீசாரிடம் வாக்குவாதம் செய்தார். 6 மாதங்களுக்கு முன்பாக தன்னை தாக்கியவர்கள் மீது கொடுத்த புகார் மீது ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை என்று கேள்வி எழுப்பினார்

அங்கு சாதாரண உடையில் அமர்ந்திருந்த காவலர் அன்புவை கண்டுகொள்ளாமல் செல்போனில் மூழ்கிய படி இருந்தார். இதையடுத்து அவரது சட்டையில் ரத்தத்தை எடுத்து பூசி வம்பு செய்த அன்பை கண்டு பயந்து அவர் காவல் நிலையம் உள்ளே சென்றார்

உள்ளே இருந்து சக போலீசாரை அழைத்து வந்த போது அன்பு அடுத்த கட்ட அடாவடியாக காவல் நிலைய நுழைவாயில் கேட்டை இழுத்துப் பூட்டி வைத்துக் கொண்டு, காவலர்களை உள்ளே நுழைய விடாமல் தகராறு செய்தார்.

அங்கு பணியில் இருந்த காவலர்களை அன்பு, தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டிய போதும், காவல்துறையினர் அதனை கண்டு கொள்ளாமல் அவரை அங்கிருந்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்

மருத்துவமனையில் வைத்து இவரை செய்தியாளர்கள் படம் பிடிப்பதை பார்த்து அவர்களிடம் வம்பிழுக்க சென்றார். போலீசார் தடுத்து அவரை சிகிச்சைக்கு அழைத்துச்சென்றனர்.

ஒரு காலத்தில் சென்னையில் உள்ள ஒரு தொலைக்காட்சியின் ஊழியராக பணிபுரிந்த அன்பு , மதுவுக்கு அடிமையாகி போலீஸ் வழக்கில் சிக்கியதால் அவ்வப்போது இது போன்று ரகளையில் ஈடுபடுவதாக உறவினர்கள் தெரிவித்தனர்.மது பழக்கம் குடியை மட்டுமல்ல ஒரு மனிதனின் குணத்தையும் கெடுத்துவிடும் என்பதற்கு சாட்சியாக மாறி உள்ளார் அன்பு..!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.