ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் அமைந்துள்ள ஏழுமலையான் கோயிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். தினசரி பல்லாயிரக்கணக்கான எண்ணிக்கையில் கூட்டம் நிரம்பி வழிகிறது. விரைவில் கோடை விடுமுறை தொடங்கவுள்ளதால் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த சூழலில் திருமலை திருப்பதி தேவஸ்தானத் தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அலிபிரி இலவச டோக்கன்அதில், அலிபிரி நடைபாதை வழியாக திருமலைக்கு நடந்தே வரும் பக்தர்களுக்கு மீண்டும் இலவச டோக்கன்கள் (Divya Darshan Tokens) வழங்கப்படும். இந்த நடைமுறை வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும். அலிபிரி நடைபாதை வழியாக வருவோருக்கு நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் டோக்கன்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை வழியாக திருமலைக்கு வருவோருக்கு 5 ஆயிரம் டிக்கெட்கள் வழங்கப்படும்.
3 மாதங்களுக்கு கட்டுப்பாடுகள்மேலும் கோடை விடுமுறையை ஒட்டி அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் வகையில் போதிய ஏற்பாடுகள் செய்யப்படும். ஏப்ரல் 15 முதல் ஜூலை 15 வரையிலான காலகட்டத்தில் பக்தர்கள் வருகை மிகவும் அதிகமாக இருக்கும். இந்த சமயத்தில் விஐபி பிரேக் தரிசனம், ஸ்ரீவானி, சுற்றுலா இடஒதுக்கீடு, ஆன்லைன் சேவை, 300 ரூபாய் தரிசன டிக்கெட் உள்ளிட்டவை சற்றே குறைக்கப்படும்.திருப்பதி டூ திருமலை: காலில் கட்டி கஞ்சா கடத்திய TTD ஊழியர்… ஆடிப் போன போலீஸ்!
தேவஸ்தான ஏற்பாடுகள்பரிந்துரை கடிதங்கள் மூலம் விஐபி தரிசனம் மேற்கொள்ளும் வசதி மேற்குறிப்பிட்ட மூன்று மாதங்களுக்கு பெருமளவில் குறைக்கப்படும். இதன்மூலம் சாதாரண பக்தர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க முடியும். நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருக்கும் சூழல் குறைந்து விரைவாக தரிசிக்க வழி ஏற்படும். திருமலையின் தெருக்களில் குளிர்ச்சியான வண்ணம் பூசப்படும். இதனால் அதிக வெப்பத்தின் காரணமாக பக்தர்களின் கால் சுடாமல் தடுக்கப்படும்.
விடுதி அறைகள் ஒதுக்கீடுதிருமலையில் பக்தர்கள் தங்குவதற்கான அறைகளை ஒதுக்கும் விவகாரத்தில் விதிமுறைகள் கடுமையாக்கப்படும். தங்கும் விடுதி அறைகள் விஷயத்தில் வெளிப்படைத் தன்மை உடன் முகத்தை சரிபார்க்கும் தொழில்நுட்பம் (Face Recognition Technology) மூலம் உறுதி செய்யப்படும். தற்போது திருமலையில் 7,500 அறைகள் இருக்கின்றன. இவற்றில் சுமார் 40 ஆயிரம் பேர் தங்க முடியும். இந்த அறைகளில் 85 சதவீதம் சாதாரண பக்தர்களுக்கு ஒதுக்கபப்டும்.
அன்னதானம் டூ குடிநீர் வரைமாதுஸ்ரீ தரிகொண்டா வெங்கமாம்பா அன்னபிரசாத கட்டிடம், பழைய அன்னதானம் காம்பிளக்ஸ், PAC 2 மற்றும் 4, நாராயணகிரி கார்டன் உள்ளிட்ட இடங்களில் அன்னதானம் போடப்படும். முக்கியமான இடங்களில் ஜல்பிரசாத மையங்கள் மூலம் பாதுகாப்பான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். திருமலை முழுவதும் தூய்மையாக வைத்திருக்க அதிகாரிகள், ஊழியர்கள் மூலம் 24 மணி நேரமும் ஏற்பாடுகள் செய்யப்படும்.
அரசு இல்லத்தை காலி செய்ய நோட்டிஸ்; ராகுலுக்கு மேலும் ஒரு சிக்கல்.!
சுப்பா ரெட்டி அறிவிப்புதேவஸ்தான கண்காணிப்பு அதிகாரிகள், போலீசார் உதவியுடன் போக்குவரத்து மற்றும் பார்க்கிங் வசதிகளில் சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளப்படும் என்று சுப்பா ரெட்டி தெரிவித்தார். முன்னதாக திருமலையில் கோடைக்கால முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் மேற்குறிப்பிட்ட விஷயங்களை சுப்பா ரெட்டி பகிர்ந்து கொண்டார்.