துருக்கி நோக்கி சென்றுகொண்டிருந்த 20 மில்லியன் டாலர் கொக்கைன் போதைப்பொருளை பெரு நாட்டு போலீசார் கைப்பற்றினர்.
டைல்ஸ் கற்கள் போல செய்து மரப்பெட்டிகளுக்குள் வைத்து கடல் வழியாக அனுப்பப்பட்ட 2.3 டன் கொக்கைன் போதைப்பொருள்களை போலீசார் கண்டுபிடித்தனர்.
கடந்த ஆண்டு மட்டும் 28 டன் கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஐ.நா சபையின் கூற்றுப்படி, உலக அளவில் பெரு மற்றும் கொலம்பியா நாடுகளில் கொக்கைன் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.