புதுடில்லி, மிகப் பெரிய சரக்கு கப்பல்களை கையாளும் வகையில், நாட்டில் உள்ள அனைத்து துறைமுகங்களின் ஆழத்தை அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளதாக, பார்லிமென்ட் நிலைக்குழு கருத்து தெரிவித்துள்ளது.
மத்திய போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலாசாரத்துறை அமைச்சகத்தின் பார்லிமென்ட் நிலைக்குழு தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
நாட்டில் உள்ள பெரும்பாலான துறைமுகங்களில், சரக்கு கப்பல்களை நிறுத்துமிடத்தின் ஆழம் மிக குறைவாக உள்ளது. பழைய துறைமுகங்களில் 23 அடியும், புதிய துறைமுகங்களில் 66 அடி ஆழம் மட்டுமே உள்ளன.
மத்திய அரசின் சாகர்மாலா திட்டத்தின் கீழ், துறைமுகங்களை நவீனமயமாக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இத்திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள அனைத்து துறைமுகங்களின் ஆழத்தையும் அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளது.
அப்போது தான் வருங்காலத்தில் மிகப் பெரிய அளவிலான சரக்கு கப்பல்களை கையாள்வதில் சிக்கல்கள் ஏற்படாமல் பாதுகாக்க முடியும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement