நடுங்கவைக்கும் சம்பவம்… தீயில் கருகி கொத்தாக பலியான அப்பாவி புலம்பெயர் மக்கள்


மெக்சிகோவில் அமைந்துள்ள புலம்பெயர்ந்தோர் செயலாக்க மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி கொத்தாக 39 பேர் பலியாகியுள்ளதாக நடுங்கவைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

வெடித்த போராட்டம்

குறித்த மையத்தில் இருந்து புலம்பெயர் மக்கள் நாடுகடத்தப்பட இருந்த நிலையில், திடீரென்று போராட்டம் வெடித்ததாகவும், இதில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

நடுங்கவைக்கும் சம்பவம்... தீயில் கருகி கொத்தாக பலியான அப்பாவி புலம்பெயர் மக்கள் | Protest At Migrant Holding Center Deadly Fire

@reuters

பலியானவர்களில் பலர் அமெரிக்காவில் நுழைய முயன்று வந்த வெனிசுலா நாட்டவர்கள் என்றே தெரியவந்துள்ளது.
உள்ளூர் நேரப்படி இரவு 10 மணியளவில் புலம்பெயர் மையத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறுகின்றனர்.

கடந்த சில வாரங்களாக குறித்த மையத்தில் புலம்பெயர் மக்களின் கூட்டம் அதிகரித்தே காணப்படுவதாக கூறுகின்றனர்.
தீ விபத்து குறித்து மெக்சிகோ ஜனாதிபதி Andrés Manuel López Obrador தெரிவிக்கையில்,

நடுங்கவைக்கும் சம்பவம்... தீயில் கருகி கொத்தாக பலியான அப்பாவி புலம்பெயர் மக்கள் | Protest At Migrant Holding Center Deadly Fire

@reuters

நாடுகடத்தப் போவதாக தகவல்

மெத்தைகளை எரித்து புலம்பெயர்ந்தோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
தங்களை நாடுகடத்தப் போவதாக தகவல் கசிந்ததை அடுத்தே, புலம்பெயர் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால், இந்த ஆர்ப்பாட்டம் பேரிழப்பாக மாறும் என அவர்கள் எண்ணியிருக்க வாய்ப்பில்லை எனவும் ஜனாதிபதி Andrés Manuel López Obrador தெரிவித்துள்ளார்.

நடுங்கவைக்கும் சம்பவம்... தீயில் கருகி கொத்தாக பலியான அப்பாவி புலம்பெயர் மக்கள் | Protest At Migrant Holding Center Deadly Fire

@reuters

குறித்த மையத்தில் புதிதாக இணைந்துள்ளவர்கள் தங்கியிருந்த பகுதியிலேயே தீ விபத்து ஏற்பட்டதாக கூறுகின்றனர்.
இதில் மொத்தம் 39 பேர்கள் பலியாகியுள்ளனர். பலர் காயங்களுடன் தப்பியுள்ளனர். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.