ரஷ்யாவுடனான போரின் போக்கு குறித்து போலந்து ஜனாதிபதியுடன் பேசியதாக உக்ரேனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் – ரஷ்யா போர்
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போர் ஓர் ஆண்டை கடந்துள்ளது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவு அளித்து, ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன.
இதற்கிடையில் பல நாடுகளின் உதவியை உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி நாடி வருகிறார்.
@Alexey Furman | Getty Images
போலந்து ஜனாதிபதியுடன் பேச்சு
அந்த வகையில் போலந்து ஜனாதிபதியுடன் அவர் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளார்.
ஜெலென்ஸ்கி தனது பதிவில்,
‘இந்த பரபரப்பான நாளின் முடிவில், நான் போலந்து ஜனாதிபதி அட்ரஸிஜ் டுடாவிடம் பேசியபோது முன் பகுதிகளில் உள்ள நிலைமை, போரின் போக்கு குறித்து பேசினேன்.
உக்ரைனின் தற்போதைய பாதுகாப்புத் தேவைகள் மற்றும் எதிர்காலத்திற்கான கூட்டு ராஜதந்திர முயற்சிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
முக்கியமான நிகழ்வுகளுக்கு நாங்கள் தயாராகி வருகிறோம்’ என தெரிவித்துள்ளார்.
At the end of this busy day, I spoke with 🇵🇱 President @AndrzejDuda. Told about the course of hostilities, the situation in certain areas of the front. Discussed Ukraine’s current defense needs & joint diplomatic efforts for the near future. We are preparing for important events.
— Володимир Зеленський (@ZelenskyyUa) March 27, 2023
@APA