பிரான்ஸில் அரசு ஊழியர்களின் ஓய்வு வயது உயர்த்தப்படுவதை கண்டித்து நாண்டஸ் நகரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வங்கி ஒன்றை தீயிட்டு கொளுத்தினர்.
பிரான்ஸ் அரசு, நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தாமல் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஓய்வூதிய சட்ட மசோதாவை நிறைவேற்றியது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
நாளுக்கு நாள் போராட்டங்கள் வலுத்துவருவதால் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 13,000 போலீசார் போராட்டத்தின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.