மதுரை சித்திரை திருவிழா கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் மே மாதம் ஐந்தாம் தேதி நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், கள்ளழகர் ஊர்வலம் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நிரல் குறித்த விவரங்களை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, ஏப்ரல் 28-ஆம் தேதி, தங்க ரிஷபம், வெள்ளி ரிஷபம், நான்கு மாசி வீதிகளில் புறப்பாடு நடைபெறும் என்றும், ஏப்ரல் 30-ஆம் தேதி தங்க பல்லக்கு வெள்ளி சிம்மாசனம் மண்டகப்படி சேர்தல் நிகழ்ச்சி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 1-ஆம் தேதி விஜயம் இந்திர விமானம் வைபவமும், 2-ஆம் தேதி, அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வெள்ளி சிம்மாசனமும் 3-ஆம் தேதி சுவாமி திருத்தேரோட்டம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே மாதம் 4-ஆம் தேதி சித்திரை பெருவிழா நிறைவு நிகழ்ச்சியும், 5-ஆம் தேதி மிகவும் பிரசித்தி பெற்ற கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு விழாவிற்கான முன் ஏற்பாடு பணிகள் நடைபெற்ற வருவதாகவும் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.