இந்தியாவை முழு வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவது உள்ளிட்ட 2 இலக்குகளை மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி நிர்ணயித்திருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற ASSOCHAM’s அமைப்பின் நிகழ்ச்சியில் பேசிய அவர், 2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை முழு வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவது, 2025ம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார சக்தியாக இந்தியாவை உருவாக்குவது ஆகிய 2 இலக்குகளை பிரதமர் நிர்ணயித்திருப்பதாக தெரிவித்தார்.
இந்த 2 இலக்குகளையும் நம்மால் நிச்சயம் அடைய முடியும் என்று தெரிவித்த அமித் ஷா, இதற்கான அடித்தளத்தை பிரதமர் மோடி கடந்த 9 ஆண்டுகளில் அமைத்திருப்பதாகவும் கூறினார்.
இந்தியாவின் மொத்த மக்கள் தொகையான 130 கோடி பேரை சிலர் சுமையாக கருதுவதாகவும், ஆனால் தாம் இதை மிகப்பெரிய சந்தையாக கருதுவதாகவும் அமித் ஷா குறிப்பிட்டார்.