லண்டனில் பல்கலைக்கழக மாணவி ஒருவரின் மர்ம மரணத்தில், நீண்ட பல ஆண்டுகளுக்கு பின்னர் பிரபல கோடீஸ்வரர் ஒருவரின் மகன் முதல்முறையாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கட்டிட இடிபாடுகளுக்கிடையில் சடலம்
லண்டன் மாணவி, 23 வயதான மார்டின் விக் மாக்னுசென் என்பவரின் சடலம் 2008 மார்ச் மாதம் கண்டெடுக்கப்பட்டது.
மேஃபேர் பகுதியில் அமைந்துள்ள Maddox இரவு விடுதியில் தமது நண்பர்களுடன், தேர்வுகள் அனைத்தும் முடிவடைந்ததை கொண்டாடி வந்துள்ளார் மாக்னுசென்.
@mylondon
இந்த நிலையில் கிரேட் போர்ட்லேண்ட் தெருவில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றின் தரைத்தளத்தில், கட்டிட இடிபாடுகளுக்கிடையில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.
அதே வளாகத்தில் தான் ஏமன் நாட்டு கோடீஸ்வரரின் மகன் பாரூக் அப்துல்ஹக் வசித்து வந்துள்ளார்.
இவரும் மாக்னுசெனும் ஒரே கல்லூரியில் கல்வி பயின்று வந்துள்ளனர். மட்டுமின்றி, மாக்னுசென் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் பொலிசார் முன்னெடுத்த விசாரணையின் ஒருபகுதியாக கண்காணிப்பு கமெரா பதிவுகளை சோதனையிட்ட பொலிசாருக்கு,
நள்ளிரவு சுமார் 2.59 மணிக்கு Maddox இரவு விடுதியில் இருந்து இவர்கள் இருவரும் தனியாக வெளியேறுவதும் பதிவாகியிருந்தது.
இந்த நிலையில், 48 மணி நேரத்திற்கு பின்னர் மாக்னுசென் சடலமாக மீட்கப்பட்டார்.
கழுத்து நெரிக்கப்பட்டு கொலை
அவர் பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யபப்ட்டுள்ளதாக பொலிசார் உறுதி செய்தனர்.
இதனிடையே, மாக்னுசென் மரணமடைந்த சில மணி நேரத்தில் அப்துல்ஹக் பிருத்தானியாவில் இருந்து வெளியேறி ஏமன் தப்பியுள்ளார்.
அதன் பின்னர், இதுவரை அவர் பிரித்தானியாவுக்கு திரும்பவும் இல்லை, பொலிஸ் விசாரணைக்கு உட்படவும் இல்லை.
தற்போது பிரித்தானிய செய்தி ஊடகம் ஒன்று முன்னெடுத்த ரகசிய விசாரணையில், அப்துல்ஹக் முதல்முறையாக இந்த விவகாரம் தொடர்பில் வெளிப்படையாக பேசியதுடன்,
@mylondon
உறவின் போது நடந்த தவறில், மாக்னுசென் மரணமடைந்ததாகவும் ஒப்புக்கொண்டுள்ளார்.
மட்டுமின்றி, துரதிர்ஷ்டவசமாக நடந்த விபத்துக்கு நான் வருந்துகிறேன் எனவும் அப்துல்ஹக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பிரித்தானியாவில் தங்கியிருந்து, தண்டனையை பெற்றிருக்க வேண்டும் எனவும், ஒரு குழப்பமான மனநிலையில் ஏமனுக்கு தப்பி வந்ததாகவும் அப்துல்ஹக் தெரிவித்துள்ளார்.
உடல் முழுவதும் 43 காயங்கள்
மாக்னுசென் விவகாரத்திற்கு பின்னர் அப்துல்ஹக் தமது பேஸ்புக் பக்கத்தை முடக்கியிருந்தார். இதுவே அவர் மீதான சந்தேகத்தை வலுவடைய செய்ததாக கூறப்படுகிறது.
மேலும், அப்துல்ஹக் தங்கியிருந்த குடியிருப்பின் தரைத்தளத்தில் அரைகுறை ஆடையில் மாக்னுசென் சடலம் மீட்கப்பட்டது.
அவரது உடல் முழுவதும் 43 காயங்கள் மற்றும் பல்த்தடங்கள் காணப்பட்டுள்ளது.
வழக்கின் விசாரணைக்காக இனிமேலும் பிரித்தானியா திரும்பும் எண்ணம் இல்லை எனவும் அப்துல்ஹக் தெரிவித்துள்ளார்.
லண்டன் பொலிசாரின் மிகவும் தேடப்படும் நபர்கள் பட்டியலில் அப்துஹ்க் இடம்பெற்றிருந்தாலும், ஏமனுடன் இங்கிலாந்துக்கு நாடு கடத்தல் ஒப்பந்தம் இல்லை என்பதால், இந்த வழக்கில் அப்துல்ஹக் தண்டனை பெறுவது சந்தேகம் என்றே கூறுகின்றனர்.