சிலிக்கா: பாதுகாப்பு படையில் உள்ள காலியிடங்களுக்கு 4 ஆண்டு பணி அடிப்படையில் அக்னிவீரர்கள் தேர்வு செய்ய ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் முதல்கட்டமாக 2585 அக்னிவீரர்கள் தேர்ச்சி பெற்று ஒடிசா மாநிலம் சிலிக்கா ஐஎன்எஸ் மையத்தில் பயிற்சி பெற்றனர். 4 மாதங்கள் பயிற்சி பெற்று அவர்கள் இனிமேல் படைகளில் இணைக்கப்பட உள்ளனர். இதில் 272 பேர் பெண்கள் ஆவர்.