லாட்டரியில் ;பணம் விழுந்தால் அதிர்ஷ்டம் தான்.அதிலும் பரிசுத்தொகை கோடிக்கணக்கானது என்றால் கொண்டாட்டம் என்றாலு, சிலருக்கு அதில் திண்டாட்டமு ஏற்பட்டுள்ளது. ஆம்! கோடிக்கணக்கான பணம் லட்டரியில் கிடைத்துவிட்டது என நம்பரை கொண்டுப் போய் கொடுத்தால், மற்றொருவரும் அதே சீட்டை நீட்டினால், நிலைமை என்னவாகும்?
அதிலும் இரண்டு பேரின் லாட்டரி சீட்டுகளும் அசலானதுதான் என்று தெரிய வந்தால்? கைக்கு வந்தது வாய்க்கு எட்டவில்லை என்று கவலை உண்டாகும். ஆனால், விஷயத்திற்கான தீர்வு எப்படியாவது எட்டப்பட வேண்டும் தானே?
ஆனால் இந்த இடியாப்ப சிக்கலுக்கு தீர்வு காண்பது மிகவும் சிக்கலானது. அத்தகைய சூழ்நிலை ஏற்பட்டால் பணம் யாருக்கு கிடைக்கும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. சில காலத்திற்கு முந்தைய ஒரு வழக்கு ஆய்வை மேற்கோள் காட்டி எடுக்கப்பட்ட இந்த தீர்வுக்கு லாட்டரி நிபுணர்களும் ஒத்துக் கொண்டுள்ளனர்.
லாட்டரி முடிவுகள் வெளிவந்தவுடன், மக்கள் ஒரு நொடியில் பணக்காரர்களாக மாறுகிறார்கள். துபாய் மற்றும் தென் அமெரிக்காவில் பல வகையான லாட்டரி விளையாட்டுகள் உள்ளன. பல்வேறு இடங்களில் லாட்டரி விதிகள் வித்தியாசமாக இருந்தாலும், சமீபத்தில் சமூக வலைதளங்களில் நடந்த விவாதத்தின் போது, லாட்டரி ஜாக்பாட்டில் இருவரின் பெயர்கள் வந்தாலோ, லாட்டரி எண் வெளியானாலோ யாருக்கு என்ன கிடைக்கும் என்ற கேள்வி சமூக ஊடகங்களில் வைரலானது.
மேலும் படிக்க | முதலில் DA உயர்வு..இப்பொது மற்றொரு ஜாக்பாட் செய்தி ஊழியர்களுக்கு
லாட்டரியில் இருவருக்கு பரிசுத்தொகை
உண்மையில், இது மிகவும் அரிதாகவே நிகழ்கிறது, ஆனால் இந்த சூழ்நிலை ஏற்படும் போது லாட்டரியின் விதிகள் நிலைமையை சீர் செய்ய உதவுகின்றன சில காலத்திற்கு முன்பு, அமெரிக்காவில் ஒரே லாட்டரியில் இரண்டு பேர் வெற்றி பெற்ற சூழல் உருவானது.
பல கோடி ரூபாய் மதிப்பிலான லாட்டரியில் இருவரின் பெயர்கள் வெளியாகின. அமெரிக்க ஊடக அறிக்கையின்படி, ‘இல்லினாய்ஸ் லாட்டரி’ என்ற அமைப்பின் கீழ், ஒரு லாட்டரி குலுக்கலில், லாட்டரியில் வெற்றிப் பெற்றவரின் எண் அறிவிக்கப்பட்டது. சிறிது நேரம் கழித்து, இரண்டு பேர் அதை தங்கள் சொந்தம் என்று கூறினர்.
முடிவு என்ன?
லாட்டரி அதிகாரிகள் இருவரின் எண்களையும் கலந்தபோது, உண்மையில் இரண்டு எண்களும் ஒரே மாதிரியாக இருந்தன, அதாவது இரண்டு பெயர்களும் லாட்டரியில் சேர்க்கப்பட்டுள்ளன. அதன் பிறகு கோடிக்கணக்கான பரிசுத்தொகையை இருவருக்கும் பிரித்துக் கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது.
அதை ஏற்றுக் கொண்டவெற்றியாளர்கள் இருவரும் பணத்தை சமமாகப் பிரித்துக் கொள்ள முடிவு செய்தனர். தற்போதைக்கு, லாட்டரி வென்றவர்களும் தங்கள் அடையாளத்தை மறைக்க முடிவு செய்துள்ளனர். இந்த முடிவு பெரிதும் பாராட்டப்பட்டது. இருப்பினும், இதுபோன்ற வழக்குகள் எப்போதாவதுதான் வெளிவரும்.
மேலும் படிக்க | கேரளா லாட்டரி முடிவுகள், முதல் பரிசு ரூ 75 லட்சம்..யார் அந்த அதிர்ஷ்டசாலி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ