8 ஆவது ஊதியக்கமிஷன்: லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், சில நாட்களுக்கு முன்னர் அரசு அகவிலைப்படியை 4 சதவிகிதம் அதிகரித்தது. இதனால் ஊழியர்களின் ஊதியத்தில் பம்பர் ஏற்றம் இருக்கும். இதற்கிடையில் 8வது ஊதியக் குழு தொடர்பான சர்ச்சைகளும் கலந்துரையாடல்களும் நடந்துவருகின்றன. முன்னதாக, 2022 ஆம் ஆண்டில், மத்திய அரசு 8 ஆவது ஊதியக்கமிஷன் தொடர்பான கூற்றை மறுத்ததோடு, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம், அலவன்ஸ் மற்றும் ஓய்வூதியங்களைத் திருத்த 8வது மத்திய ஊதியக் குழு அமைக்கப்படாது என்றும் கூறியிருந்தது. எனினும் இது குறித்த பேச்சுவார்த்தைகள் மிக அதிக அளவில் நடந்துவருகின்றன.
இது குறித்து அப்போது மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், அத்தகைய திட்டம் எதுவும் பரிசீலிக்கப்பட வேண்டியதில்லை என்று கூறினார். “மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஊதியம், அலவன்ஸ்கள் மற்றும் ஓய்வூதியத்தை மறுசீரமைக்க 8வது மத்திய ஊதியக் குழுவை (சிபிசி) அமைக்க வேண்டாம் என்று அரசாங்கம் பரிசீலித்து வருகிறது என்பது உண்மையா” என்ற கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
7வது ஊதியக்குழுவிற்கு பதிலாக 8வது ஊதியக்குழு கொண்டு வரப்படுமா?
இது குறித்து இன்னும் உறுதியான பதிலை அரசாங்கம் அளிக்கவில்லை. இருப்பினும், 8வது ஊதியக் குழுவை விரைவில் அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஊதியக் குழு விதிகள் பொதுவாக அரசு ஊழியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருத்தப்படும். 5வது, 6வது மற்றும் 7வது ஊதியக் குழுக்கள் அமலாக்கத்தின் போதும் இதே முறைதான் பின்பற்றப்பட்டது.
8வது ஊதியக் குழு எப்போது நடைமுறைப்படுத்தப்படும்?
8வது ஊதியக் குழுவானது 2024ல் அறிமுகப்படுத்தப்பட்டு, 2 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 2026ல் அமல்படுத்தப்படும் என்று அறிக்கைகளில் கூறப்படுகின்றது. 2024-ம் ஆண்டு மே மாதத்திற்குள் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக மத்திய அரசு, அரசு ஊழியர்களுக்கு இந்தப் பெரிய பரிசை வழங்ககூடும் என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டது
50 லட்சத்திற்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்களுக்கு 2023 ஆம் ஆண்டின் முதல் அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பு சில நாட்களுக்கு முன்னர் வந்தது. இதனால் ஊழியர்களின் ஊதியத்தில் பம்பர் உயர்வு ஏற்பட்டுள்ளது.
8வது ஊதியக்கமிஷனில் எவ்வளவு அதிகரிப்பு இருக்கும்?
இப்போது 8வது ஊதியக்கமிஷன் அமைக்கப்பட்ட பிறகு, அரசு பழைய அளவிலேயே சம்பளத் திருத்தத்தை செய்தால், இதிலும் ஃபிட்மென்ட் ஃபாக்டரே அடிப்படையாகக் கருதப்படும். இதன் அடிப்படையில் ஊழியர்களின் ஃபிட்மெண்ட் 3.68 ஆக்க முடியும். இதன் அடிப்படையில், ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியத்தில் 44.44% உயர்த்தப்படலாம். இதன் மூலம், ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.26000 ஆக அதிகரிக்கும்.