Ilayaraja: இளையராஜா மாதிரி ஒரு மட்டமான மனுஷன பார்க்கவே முடியாது: ஜேம்ஸ் வசந்தன் பேச்சால் பரபரப்பு

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
James Vasanthan slams Ilayaraja: இளையராஜா ரொம்ப மட்டமானவர், மெச்சூரிட்டியே இல்லாதவர் என இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்துள்ளார்.

​இளையராஜா​இசைஞானி இளையராஜாவை இசைக்கடவுள் என இசை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பேட்டி ஒன்றில் இளையராஜாவை விளாசியிருக்கிறார். அந்த பேட்டியில் ஜேம்ஸ் வசந்தன் கூறியதாவது, இசைமைப்பாளர் இளையராஜா தான் என் குரு. அவரின் பாடல்களை கேட்டு இசையை கற்றுக் கொண்டேன், வளர்ந்தேன். இளையராஜா என்கிற தனி மனிதரை தான் நான் விமர்சிக்கிறேன். இளையராஜா மாதிரி ஒரு மட்டமான மனிதரை பார்க்கவே முடியாது. என் குருவை நான் விமர்சிக்கவில்லை என்றார்.
​ஜேம்ஸ் வசந்தன்​ஜேம்ஸ் வசந்தன் மேலும் கூறியதாவது, நான் இளையராஜாவின் இசைப்பகுதியை விமர்சிக்கவில்லை. அது பற்றி பெருமையாக பேசுவேன். ஒரு மனிதராக அவர் ரொம்ப மட்டமானவர். கொஞ்சம் கூட முதிர்ச்சி இல்லை. சினிமா துறையில் பலர் அவரை சாமி என்பார்கள். ரஜினி சார் கூட அவரை சாமி என்று அழைப்பார். அந்த அளவுக்கு அவர் ஆன்மீகத்தில் உள்ளே சென்று பேசியவர். ஆன்மீகத்திற்குள் போகப் போக பெருந்தன்மையும், முதிர்ச்சியும், புரிந்து கொள்தலும், சகிப்புத்தன்மையும் வந்தால் தானே ஆன்மீகம். இவர் ஆன்மீகத்திற்குள் போவதாக சொல்லிக் கொண்டு வெளியே அசிங்கமாக பேச ஆரம்பித்தார் என்றார்.
​ஏமாத்துக்காரர்​இளையராஜா ஏமாத்துக்காரர். ஒரு பிரபலமாக இருக்கும் இளையராஜாவுக்கு பொறுப்பாக நடக்கும் பண்பு இல்லை. அது தான் எனக்கு பிடிக்கவில்லை. ஏ.ஆர். ரஹ்மான் தனிப்பட்ட மனுஷனாக பண்புடன் நடந்து கொள்கிறார். அனைவருக்கும் ரோல் மாடலாக இருக்கிறார். ஆனால் இளையராஜா அப்படி இல்லை என்று மேலும் தெரிவித்தார் ஜேமஸ் வசந்தன்.
​எதிர்ப்பு​ஜேம்ஸ் வசந்தனின் பேட்டிக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது. ஒரு இசைக்கடவுளை போய் ஜேம்ஸ் வசந்தன் இந்த அளவுக்கு தரக்குறைவாக விமர்சித்திருப்பது தவறு. இசைஞானிக்கு மெச்சூரிட்டி இருக்கிறது. அதை ஜேம்ஸ் வசந்தன் புரிந்து கொள்ளவில்லை. இதற்காக ஜேம்ஸ் வசந்தன் மன்னிப்பு கேட்க வேண்டும் என இளையராஜா ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். சிலரோ ஜேம்ஸ் வசந்தன் சொல்வது சரி என்கிறார்கள்.
​ஃபேஸ்புக்​ஃபேஸ்புக்கில் படு ஆக்டிவாக இருப்பவர் ஜேம்ஸ் வசந்தன். அங்கும் அவர் இளையராஜாவை விமர்சித்து போஸ்ட் போட்டிருக்கிறார். நான் இளையராஜாவின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றியோ, இசையை பற்றியோ விமர்சிக்கவில்லை. ஒரு பிரபலமாக பொது வெளியில் பொறுப்பில்லாமல் பேசுவது, நடப்பதை மட்டுமே விமர்சிக்கிறேன் என்கிறார் ஜேம்ஸ் வசந்தன். இளையராஜா பற்றி ஜேம்ஸ் வசந்தன் பேசியது குறித்து சமூக வலைதளங்களில் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.