அக்கா மகள் பவானிஸ்ரீயை வாழ்த்திய ஏஆர் ரஹ்மான்
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் குடும்பத்தையும் முக்கியமான குடும்பம் என்று சொல்லலாம். அவரது அக்கா ஏஆர் ரைஹானா சில படங்களுக்கு இசையமைத்துள்ளார், சில பாடல்களைப் பாடியுள்ளார். ரைஹானாவின் மகன் ஜிவி பிரகாஷ்குமார் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராகவும், நடிகராகவும் உள்ளார்.
ஜிவி பிரகாஷின் தங்கையான பவானிஸ்ரீ இரண்டு நாட்களில் வெளியாக உள்ள 'விடுதலை' படத்தில் சூரி ஜோடியாக நடித்துள்ளார். பவானிஸ்ரீ இதற்கு முன்பு “கபெ ரணசிங்கம்” படத்திலும், ''பாவக் கதைகள்” வெப் தொடரிலும் நடித்துள்ளார்.
'விடுதலை' படத்தில் சூரி கதையின் நாயகன் என்றால், பவானிதான் கதையின் நாயகி. பவானி அவருடைய டுவிட்டர் தளத்தில் நேற்று 'விடுதலை' படத்தின் புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அதற்கு ஏஆர் ரஹ்மான், பவானிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். விரைவில் படத்தையும் பார்த்துவிட்டு பாராட்டுவார் என எதிர்பார்க்கலாம்.
வெற்றிமாறன் இயக்கியுள்ள இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். சூரி, விஜய் சேதுபதி, பிரகாஷ்ராஜ், கவுதம் மேனன், ராஜீவ் மேனன் மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.