பெங்களூரு: இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் பறக்கும் டாக்ஸிகள் பொதுப் பயன்பாட்டுக்கு வரும்என்று மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார்.
பறக்கும் டாக்ஸி தொழில்நுட்பம் தொடர்பாக நேற்று பெங்களூருவில் நடைபெற்ற மாநாட்டில் ஜோதிராதித்யா சிந்தியா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது, “நாம் பறக்கும் கார்களை இதுவரையில் சினிமாவில்தான் பார்த்தோம். ஆனால், விரைவில் அது பயன்பாட்டுக்கு வரவுள்ளது. பறக்கும் டாக்ஸிகளுக்கான கட்டமைப்பை உருவாக்கும் முயற்சி கடந்த 2 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடுத்த 5 ஆண்டுகளுக்குள் பறக்கும் டாக்ஸி சேவை பயன்பாட்டுக்கு வரும். பறக்கும் டாக்ஸி தொடர்பாக இந்தியாவில் முதலீடு செய்தவதற்கான சிறந்த வாய்ப்பு இது. விரைவிலேயே இந்தியாவில் பறக்கும் டாக்ஸி சேவை மிகப் பெரிய அளவில் வளரும்” என்று தெரிவித்தார்.
மின்சாரத்தில் இயங்கும் பறக்கும் டாக்ஸிகளை தயாரிக்கும்அமெரிக்காவைச் சேர்ந்த ஏரோகுரூப் நிறுவனத்துக்கும் இந்தியாவின் ஃப்ளைபிளேடு இந்தியாநிறுவனத்துக்கும் இடையேபெங்களூருவில் நேற்று ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி ஏரோ நிறு வனத்திடமிருந்து 150 பறக்கும் டாக்ஸிகளை ஃப்ளைபிளேடு இந்தியா நிறுவனம் வாங்க உள்ளது. மேலும், தேவையைப் பொறுத்து கூடுதலாக 100 பறக்கும் டாக்ஸிகள் வாங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.