ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் நெஞ்சுவலி காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு XBB வகை கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் கொரோனாவில் இருந்து அவர் கொரோவில் இருந்து குணமடைந்த அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். இதனையடுத்து அடுத்த ஓரிரு நாட்களில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என கூறப்படுகிறது.