சென்னை ஆவடியை சேர்ந்த ஜிம் பயிற்சியாளர் கடுமையான உடற்பயிற்சியின் போது திடீரென ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
கடுமையான உடற்பயிற்சி
சென்னை ஆவடியை சேர்ந்த ஆகாஷ் என்பவர் கடந்த சில வருடங்களாக உடற்பயிற்சி மேற்கொண்டு தற்போது ஜிம் பயிற்சியாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.
@gettyimages
இந்த நிலையில் மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்ட அவர் அதிக அளவு ஸ்டெராய்டு ஊசி போட்டுக் கொண்டதாக தெரிய வந்துள்ளது.
ரத்த வாந்தி எடுத்து உயிரிழப்பு
கடுமையான உடல் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஆகாஷ் திடீரென ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனையில் ஆகாஷ் அதிக அளவு ஸ்டெராய்டு எடுத்துக் கொண்டதால் அவரது இரண்டு சிறுநீரகமும் செயலிழந்து இருக்கிறது, அதனால் அவர் உயிரிழந்திருக்கிறார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதே போல் கடந்த மாதம் கடலூரைச் சேர்ந்த ஹரிஹரன் என்பவர் போட்டியில் கலந்து கொள்ளும் முன்பு உடற்பயிற்சி செய்யும் போது மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
@gettyimages
உடற்பயிற்சிக்கு முன்பாக பிரட் சாப்பிட்ட அவருக்கு விக்கல் ஏற்பட்டுள்ளது. அதன் பின் மூச்சு திணறிய அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மருத்துவர்கள் அவர் முன்னரே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.