2,000 ரூபாய்க்கு அதிகமான UPI வர்த்தக பரிவர்த்தனைகளுக்கு ஏப்ரல் 1 முதல் 0.5 சதவீதத்திலிருந்து 1.1 சதவீதம் வரை இன்டர்சேன்ஜ் கட்டணம் வசூலிக்கும்படி தேசிய பேமெண்ட் கார்ப்பரேசன் அமைப்பு பரிந்துரைத்துள்ளது.
இதுதொடர்பாக தேசிய பேமெண்ட் கார்ப்பரேசன் அண்மையில் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ப்ரீபெய்ட் பேமெண்ட் கட்டணங்கள் , UPI மூலம் மேற்கொள்ளப்படும் வர்த்தக பரிவர்த்தனைகளுக்கும் பொருந்தும் என்றும், எரிபொருளுக்கு 0.5 சதவீதமும், தொலைத் தொடர்பு துறை, தபால் அலுவலகம், கல்வி, விவசாயம் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைகளுக்கு 0.7 சதவீதமும், சூப்பர் மார்க்கெட் பரிவர்த்தனைகளுக்கு 0.9 சதவீதமும், மியூச்சுவல் பண்ட், அரசு, காப்பீடு மற்றும் ரயில்வேத் துறை பரிவர்த்தனைகளுக்கு 1 சதவீதமும் கட்டணம் வசூலிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பேடிஎம் தரப்பில், யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு எந்த கட்டணத்தையும் வாடிக்கையாளர்கள் செலுத்த தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.