நியூடெல்லி: மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் மற்றும் அமைப்புகளின் தேவைக்கேற்ப, காலிப் பணியிடங்களை நிரப்பும் பணிகள் எப்போதும் தொடரும்ம் தொடர்ச்சியான செயல் என்று மத்திய பணியாளர் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறினார்.
மார்ச் 1, 2021 நிலவரப்படி, ரயில்வேயில் அதிகபட்சமாக 2.93 லட்சம் உட்பட, பல்வேறு மத்திய அரசுத் துறைகளில் 9.79 லட்சத்திற்கும் அதிகமான காலியிடங்கள் இருந்ததாக என்று மத்திய பணியாளர் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் புதன்கிழமை தெரிவித்தார்.
மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் மற்றும் அமைப்புகளின் தேவைக்கேற்ப, காலிப்பணியிடங்கள் ஏற்படுவதும் நிரப்புவதும் ஒரு தொடர்ச்சியான செயலாகும் என்றார்.
“நிரப்பப்படாத பணியிடங்களை உரிய நேரத்தில் நிரப்புவதற்கான அனைத்து அமைச்சகங்களுக்கும் / துறைகளுக்கும் அரசாங்கம் ஏற்கனவே அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இந்திய அரசால் ஏற்பாடு செய்யப்படும் வேலைவாய்ப்பு முகாம்கள் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் ஊக்கியாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று மத்திய பணியாளர் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
ரயில்வேயைத் தவிர, பாதுகாப்பு (சிவில்) துறையில் 2.64 லட்சம் பணியிடங்கள், மத்திய உள்துறை அமைச்சகத்தில் 1.43 லட்சம் பணியிடங்கள், வருவாய்த் துறையில் 80,243, இந்திய தணிக்கை மற்றும் கணக்குத் துறையில் 25,934, அணுசக்தித் துறையில் 9,460 காலியிடங்கள் உள்ளன என்று மத்திய பணியாளர் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறினார்.
ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், ராகுல்காந்தி தகுதி நீக்க விவகாரத்தில் ஏற்பட்ட அமளியால் நாடாளுமன்றத்தின் நிகழ்வுகள் 12-வது நாளாக இன்றும் முடங்கின.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பிய நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்டன. நாடாளுமன்றத்தில் திமுக, காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்றும் கருப்பு உடை அணிந்து அமளியில் ஈடுபட்டனர்.
எதிர்க்கட்சிகளின் தொடர் போராட்டம் காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது, பிறகு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் உறுப்பினர்களின் அமளியால் மாநிலங்களவை வருகிற ஏப்ரல் மூன்றம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.