அதிமுகவின் பொதுச் செயலாளராக
தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ சான்றிதழை வாங்கிவிட்டார். மேலும் கட்சியினரின் வாழ்த்து மழையில் நனைந்துவிட்டார். இத்துடன் பிரச்சினை ஓய்ந்ததா என்றால் அதுதான் இல்லை.
தரப்பு சட்டப் போராட்டத்தை விடுவதாக இல்லை. தங்கள் முன்பிருக்கும் அனைத்து சாதகமான அம்சங்களையும் ஒரு கை பார்த்துவிட தயாராக இருக்கிறது.
அதிமுக வழக்கின் தீர்ப்பு
அந்த வகையில் தான் அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலுக்கு எதிரான வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி குமரேஷ் பாபு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷாஃபிக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.
மேல்முறையீடு, கேவியட் மனு
உடனே உஷாரான எடப்பாடி பழனிசாமி, உயர் நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், தனது தரப்பு விளக்கத்தை கேட்காமல் எவ்வித இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேல்முறையீட்டு வழக்கு விசாரணையில் யாருக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கட்சி விதி மீறல்
நேற்று தனி நீதிபதி குமரேஷ் பாபு பிறப்பித்த தீர்ப்பில் ஒரு விஷயம் ஓபிஎஸ் தரப்பிற்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. அதாவது, ஓபிஎஸ்சை கட்சியில் இருந்து நீக்க 7 நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் கொடுத்திருக்க வேண்டும் என்ற விதி மீறப்பட்டுள்ளது. இருப்பினும் அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு இடைக்கால தடை விதித்தால் கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு வரும்.
ஈடு செய்ய முடியாத இழப்பு
ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட கட்சிக்கு இழப்பை ஏற்படுத்தும் வகையில் தடை விதிக்க முடியாது. எனவே அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லுபடியாகும். பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடையில்லை என்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. அதேசமயம் ஓபிஎஸ் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கிய தீர்மானத்தை பொறுத்தவரை பிரதான வழக்கில் தான் தீர்மானிக்க முடியும் எனக் கூறப்பட்டுள்ளது.
நியாயம் கேட்கும் ஓபிஎஸ்
அதாவது விதிமீறல் நடந்திருப்பதும், கட்சி செயல்பாட்டிற்கு பங்கம் வந்துவிடக் கூடாது எனக் கருதியும் சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி மேற்குறிப்பிட்ட உத்தரவை பிறப்பித்திருப்பது தெரிய வருகிறது. எனவே ஓபிஎஸ் தனது தரப்பிற்கு நியாயம் கேட்டு நீதிமன்றத்தை அணுகினால் சாதகமான தீர்ப்பு கிடைக்கும் என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
கறார் காட்டும் ஈபிஎஸ்
ஆனால் அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றுக் கொண்டார். கட்சியின் ஒட்டுமொத்த அதிகாரமும் அவரது கைகளுக்கு சென்றுவிட்டது. ஓபிஎஸ்சை நீக்கியது செல்லும். இனி அவருக்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை என்று எடப்பாடி தரப்பினர் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி பொதுச் செயலாளராக பதவியேற்றுக் கொண்டது இன்றைய வழக்கு விசாரணையில் சாதகமாக அமையும் என்ற பார்வையை முன்வைக்கின்றனர்.