கப்பலில் இருந்து மற்ற கப்பல்களைத் தாக்கி அழிக்கும் ஏவுகணையை ரஷ்யா வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது.
ஜப்பானிய கடல் எல்லைக்கு வெளியே உள்ள பீட்டர் தி கிரேட் வளைகுடாவில் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
ரஷ்ய போர்க் கப்பலில் இருந்து செலுத்தப்பட்ட மொஸ்கிட் குரூஸ் வகை ஏவுகணைகள் 60 மைல்களுக்கு அப்பால் இருந்த இலக்கைத் துல்லியமாகத் தாக்கியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாகவும், அதனை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் ஜப்பான் தெரிவித்துள்ளது.