மதுரை: மதுரை சிறைக்கைதிகளுக்கு நடிகர் விஜய் சேதுபதி ஆயிரம் நூல்களை வழங்கினார். மதுரை மத்திய சிறைச்சாலை நூலகத்திற்கு நடிகர் விஜய்சேதுபதி நேற்று வந்தார். அங்கு சிறைத்துறை டிஐஜி பழனி மற்றும் கண்காணிப்பாளர் வசந்தகண்ணன் ஆகியோரை சந்தித்தார். அப்போது சிறையில் இருக்கும் கைதிகள், தங்களது வாசிப்புத்திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில், அங்குள்ள நூலக பயன்பாட்டிற்கு அவரது சொந்த செலவில் இருந்து 1,000 புத்தகங்களை வழங்கினார். அவருக்கு டிஐஜி மற்றும் அதிகாரிகள், சிறைக்கைதிகள் பாராட்டு தெரிவித்தனர்.
