டெல்லி: கொரோனா காலத்தில் 2,358 குழந்தை திருமண வழக்குகள் பதிவாகி உள்ளதாக அமைச்சர் ஸ்மிருதி ராணி தகவல் தெரிவித்துள்ளார். குழந்தை திருமணங்களை தடுக்க கூடுதல் அதிகாரிகள் நியமிக்க மாநிலங்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் ஸ்மிரிதி ராணி எழுத்துபூர்வமாக பதில் அளித்தார்.