சுவிட்சர்லாந்தில் கார் ஓட்டியவரை தடுத்து நிறுத்தி கைது செய்த பொலிசார்: வித்தியாசமான காரணம்!


சுவிட்சர்லாந்தில் கார் ஓட்டிக்கொண்டிருந்த ஒருவரை தடுத்து நிறுத்தி கைது செய்தார்கள் பொலிசார்.

என்ன காரணம் தெரியுமா?

சுவிட்சர்லாந்தின் Valais மாகாணத்திலுள்ள Sierre சுரங்கப்பாதையில், அதிகாலை 3.00 மணிக்கு கார் ஓட்டிக்கொண்டிருந்தார் ஒருவர்.

அவரது காரைக் கண்ட பொதுமக்கள், உடனடியாக பொலிசாருக்குத் தகவலளித்தார்கள்.

காரை தடுத்து நிறுத்திய பொலிசார், அதன் சாரதியைக் கைது செய்தார்கள்.

சுவிட்சர்லாந்தில் கார் ஓட்டியவரை தடுத்து நிறுத்தி கைது செய்த பொலிசார்: வித்தியாசமான காரணம்! | Police Arrested Car Driver In Switzerland

அவர் குடிபோதையில் இருந்தார். ஆனால், அவர் கைது செய்யப்படுவதற்காக காரணம் அவர் குடிபோதையில் இருந்தது மட்டும் அல்ல.

அவரது காரில் மூன்று சக்கரங்கள்தான் இருந்தன!

ஆம், அவரது காரிலுள்ள முன் பக்கச் சக்கரங்களில் ஒன்று எங்கோ, எப்போதோ கழன்றுபோயிருக்க, அது தெரியாமலே, ஒரு சக்கரம் இல்லாமலே, மூன்று சக்கரங்களுடன் கார் ஓட்டிக்கொண்டிருந்துள்ளார் அவர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.