ஜனாதிபதி இமானுவல் மேக்ரானை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் வடக்கு பிரான்சில் பெண் ஒருவர் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார்.
மேக்ரானுக்கு எதிரான பேஸ்புக் பதிவு
தமது பேஸ்புக் பதிவில், ஜனாதிபதி மேக்ரானை அவர் இழிவான நபர் என கடுமையாக விமர்சித்துள்ளார்.
எதிர்வரும் ஜூன் மாதம் முன்னெடுக்கப்படவிருக்கும் இந்த வழக்கின் விசாரணையில், அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், 12,000 யூரோ தொகை வரையில் குறித்த பெண் அபராதமாக செலுத்த நேரிடும் என்றே கூறப்படுகிறது.
@reuters
ஜனாதிபதி மேக்ரானுக்கு எதிரான பேஸ்புக் பதிவு தொடர்பாக மாகாண உள்ளூர் நிர்வாக அலுவலகம் புகார் அளித்ததை அடுத்து தொடர்புடைய பெண் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டு விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
மார்ச் 21ம் திகதி தமது பேஸ்புக் பக்கத்தில் அவர் மேக்ரானை மோசமாக விமர்சித்து பதிவிட்டுள்ளார்.
விவாதத்திற்குரிய, நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய ஓய்வுபெறும் வயது தொடர்பான சீர்திருத்தம் குறித்து ஜனாதிபதி மேக்ரான் செய்தி ஊடகம் ஒன்றில் நேர்முகம் அளித்திருந்தார்.
@AFP
அந்த தகவலை தமது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்ட தொடர்புடைய பெண், இந்த இழிவான நபர் மதியம் 1 மணிக்கு உங்களிடம் பேச இருக்கிறார்.
இனி அனைத்து ஊடகங்களும் இந்த இழிவான நபரின் பேச்சையை ஒளிபரப்பும் எனவும் அவர் தமது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.
மேக்ரான் மீது கடும் விமர்சனம்
50 வயதைக் கடந்த குறித்த பெண்மணி, 2018-19ல் பிரான்ஸ் நாட்டை உலுக்கிய மஞ்சள் சட்டை ஆர்ப்பாட்டங்களுக்கும் தனது ஆதரவை அப்போது தெரிவித்து பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
குறித்த ஆர்ப்பாட்டமானது ஜனாதிபதி மேக்ரானை கடும் நெருக்கடிக்கு அப்போது தள்ளியிருந்தது.
இந்த நிலையில், தற்போது ஜனாதிபதி மேக்ரானை கடுமையாக விமர்சித்ததன் பேரில் ஜூன் 20ம் திகதி நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ள இருக்கிறார்.
@AFP
வெள்ளிக்கிழமை பகல் தமது குடியிருப்புக்கு வந்து பொலிசார் தம்மை கைது செய்ததாக கூறும் அவர்,
வாழ்க்கையில் இதுவரை தாம் கைதாகும் நிலைக்கு சென்றதில்லை எனவும், தாம் ஒன்றும் பொது எதிரி அல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.