வார்சா, :உயிரிழந்த தாயின் உடலை பதப்படுத்தி, 13 ஆண்டுகளாக சோபாவுக்குள் மறைத்து வைத்திருந்த மகனை, போலந்து போலீசார் கைது செய்தனர்.
ஐரோப்பிய நாடான, போலந்தின் ராட்லின் என்ற இடத்தைச் சேர்ந்தவர் மரியன். இவரது தாய் 2010ம் ஆண்டு, தன் 95வது வயதில், வயோதிகம் காரணமாக உயிரிழந்தார்.
அவரது உடலை அடக்கம் செய்த சில தினங்களிலேயே, மகன் மரியன், தாயின் உடலை மீண்டும் தோண்டி, வீட்டுக்கு எடுத்து வந்தார். பல்வேறு ரசாயனங்களை பயன்படுத்தி உடல் அழுகாதபடி பதப்படுத்தினார்.
பின், அந்த உடலை சோபாவுக்குள் மறைத்து வைத்தார். இந்த சம்பவம் நடந்து 13 ஆண்டுகள் வரை யாருக்கும் எந்த சந்தேகமும் வரவில்லை. அந்த வீட்டில் மரியன் தனியாக வசித்து வருகிறார். சமீபத்தில் மரியன் வீட்டுக்கு வந்த உறவினர், அவரது நடவடிக்கையை கண்டு சந்தேகம் அடைந்தார். வீட்டில் பல இடங்களை அவர் சோதனை செய்தபோது, சோபாவுக்குள் இருந்த உடலை கைப்பற்றினார்.
இந்த உடல், 2009ம் ஆண்டு வெளியான செய்தித் தாள்களில் சுற்றப்பட்டு இருந்தது. இதையடுத்து, தாயின் உடலை 13 ஆண்டுகளாக மறைத்து வைத்திருந்த மகன் மரியனை கைது செய்த போலீசார், அவரை மனநல டாக்டர்களின் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
Advertisement