போஜ்புரி மொழி திரைப்படங்களில் நடித்த வந்த பிரபலமான நடிகை ஆகான்ஷா துபே. 25 வயதான இவர் உத்தரப்பிரதேசத்தில் வாரணாசியில் உள்ள ஹோட்டல் அறையில் தங்கி இருந்திருக்கிறார். நேற்று முன் தினம் இவர் தங்கியிருந்த அறை நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்திருக்கிறது. இதனால் சந்தேகம் கொண்ட ஹோட்டல் பணியாளர் அறைக்குச் சென்று பார்த்திருக்கிறார். மாற்று சாவி எடுத்துச் சென்று திறந்து பார்த்திருக்கிறார். அங்கே அறையில் இருந்த மின்விசிறியில் துணியால் தூக்கிட்டு இறந்த நிலையில் தொங்கி இருக்கிறார் ஆகான்ஷா துபே.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஹோட்டல் ஊழியர், நிர்வாகத்திற்கு தகவல் சொல்ல, ஹோட்டல் நிர்வாகத்தின் பேரில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், நடிகை ஆகான்ஷா துபே உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருக்கின்றனர் .நடிகை ஆகான்ஷா துபேவின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஹோட்டலில் அவர் தங்கி இருந்த அறைக்கு வேறு யாரேனும் வந்து சென்றார்களா? அன்றைய தினம் யார் யாருடன் பேசினார் என்பது குறித்து அவரது செல்போனிலும் ஆய்வு செய்து வருகின்றனர் போலீசார் .
இதற்கிடையில், நடிகை ஆஹான்சா துபே, நடிகரும் பாடகருமான சமர்சிங்கை காதலித்து வந்திருக்கிறார். காதலர் தினத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆகான் சாவே இதை உறுதிப்படுத்தி இருந்திருக்கிறார்.
இந்த நிலையில் அவர் ஹோட்டலில் மரணம் அடைந்ததாக வந்த தகவலை அடுத்து சக நடிகையான காஜல் ராகவா வாணி , கடவுள் இருக்கிறார். உன் உயிருக்கான விலையை நிச்சயம் கொடுக்க செய்வார். இன்று இல்லாவிட்டாலும் நாளை அது நடக்கும் . வாழ்ந்தபோது இல்லாத மகிழ்ச்சியை இப்போது நீ பெற்றிருப்பாய் என்று நம்புகிறேன். நீ எங்கிருந்தாலும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
அதாவது உயிருடன் இருக்கும் போது அவர் மகிழ்ச்சியாக இல்லை என்பதை அவர் குறிப்பிடுகிறார். இதே போலவே ஆஹான்சாவின் தாயார் மது, சமர் சிங்குடன் ஆசான்ஷா மூன்று ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். ஆனால் சமர்சிங் ஒரு பைசா கூட சம்பளமாக கொடுத்தது இல்லை. சமர் சிம் கொடுக்க வேண்டியது மூன்று கோடி ரூபாய் இருக்கும். ஒரு ஆல்பத்திற்கு 70 ஆயிரம் வீதம் சமர் பணம் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் பணம் கேட்கும் போது எல்லாம் சமர் அவளை அடித்து சித்திரவதை செய்து துன்புறுத்தி வந்தார். பிற கலைஞர்களுடன் பணியாற்ற நினைத்த போதெல்லாம் அவளை அடித்து துன்புறுத்தி வந்தார் சமர். இதனால் ஆகான்ஷா மரணத்தில் சந்தேகம் உள்ளது. அதனால் சிபிஐ விசாரணை தேவை என்று கோரிக்கை விடுத்திருக்கிறார். இதை அடுத்து வாரணாசி போலீசார் மதுவின் புகாரின் பேரில் சமர் சிங் மற்றும் அவரது சகோதரர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.