புதுடில்லி :திருமணம், விவாகரத்து, ஜீவனாம்சம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில், மதம் மற்றும் பாலின நடுநிலையுடன் கூடிய ஒரே மாதிரியான சட்டம் இயற்றக் கோரிய மனுவை, உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
திருமணம், விவாகரத்து, ஜீவனாம்சம், பரம்பரை சொத்தில் உரிமை கோருதல், உள்ளிட்ட விவகாரங்களில், மதம் மற்றும் பாலின பாகுபாடுகள் இன்றி ஒரே மாதிரியான சட்டம் இயற்றக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
இந்த விவகாரம் பார்லிமென்ட் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு வருகிறது. இதில் சட்டம் இயற்ற பார்லிமென்டுக்கு உத்தரவு பிறப்பிக்க முடியாது. அதே போல, இந்த விவகாரம் தொடர்பாக சட்ட கமிஷன் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் எழவில்லை. எனவே, இந்த மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகின்றன.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Advertisement