நாட்டில் பாவனைக்கு போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி இன்று (29) காலை 6 மணிக்கு கொலன்னாவ மற்றும் மிதுராஜவெல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொலிஸார் மற்றும் ஆயுதப்படையினரின் உதவியுடன் எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை எரிபொருள் நிரப்பு நிலைய ஒபரேட்டர்கள் (Operators) தமக்கு தேவையான குறைந்தபட்ச இருப்புகளைப் சரியான வகையில் பராமரிக்குமாறும் மற்றும் அதற்கேற்ப தேவையான ஓர்டர்களை (order) வழங்குமாறும் குறித்த ட்விட்டர் பதிவில் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.