புதுடெல்லி: நாளை மறுநாள் முதல் 384 அத்தியாவசிய மருந்துகள் மற்றும் 1,000க்கும் மேற்பட்ட மருந்துகளின் விலைகள் 11 சதவீதக்கும் அதிகமாக உயர்த்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மருத்துவ துறையில் மொத்த விற்பனை விலைக் குறியீட்டின் அடிப்படையில் 384 அத்தியாவசிய மருந்துகள் மற்றும் 1,000க்கும் மேற்பட்ட மருந்துகளின் விலைகள் 11 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் மருந்துகளின் விலை உயர்வு நடைமுறைக்கு வரும்.
குறிப்பாக வலி நிவாரணி, தொற்று எதிர்ப்பு, இதயம் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் உள்ளிட்ட வழக்கமான மற்றும் அத்தியாவசிய மருந்துகளின் விலை கட்டாயம் உயர்த்தப்படும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து ஒன்றிய சுகாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரி கூறுகையில், ‘விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால், மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கவும், உற்பத்தியாளர்களும் நுகர்வோரும் பரஸ்பரம் பயன்பெற வேண்டும் என்பதற்காகவும், வரும் ஏப். 1ம் தேதி முதல் 384 அத்தியாவசிய மற்றும் 1,000க்கும் மேற்பட்ட மருந்துகளின் விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.