லண்டனின் குரோய்டன் பகுதியில் பகல் 3 மணிக்கு மேல், மக்கள் கடைப்பக்கமே செல்ல பயப்படுவதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
சிறுவர்கள் இருவர்
கடந்த வாரம் குரோய்டனின் சர்ச் தெரு பகுதியில், 13 வயது சிறுவர்கள் இருவர் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் தள்ளியுள்ளது.
தாக்குதலுக்கு இலக்கான இருவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
Image: Facundo Arrizabalaga
திங்கட்கிழமை மதியத்திற்கு மேல் சுமார் 5.30 மணியளவில் சிறுவர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதுடன், அது கத்தியால் தாக்கப்படும் மோதலாகவும் வெடித்துள்ளது.
இதேவேளை எல்ம்வுட் சாலையில் 18 வயது இளைஞன் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் வெளியான ஒரு மணி நேரத்திற்குப் பிறகு சிறுவர்கள் இருவர் கத்திக்குத்துக்கு இலக்கான சம்பவம் வெளி வந்தது.
சர்ச் தெருவை பொறுத்தமட்டில், பாடசாலை முடிந்த பின்னர், இளம் வயது மாணவர்கள் அப்பகுதியில் ஒன்று கூடுவது வழக்கம் எனவும்,
ஆனால் கடந்த பல மாதங்களாக, இப்பகுதி இளைஞர்களின் அடாவடிகளால் பதற்றமாகவே காணப்படுகிறது எனவும் இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
பொதுமக்களுக்கு அச்சுறுத்தல்
இப்பகுதி கடைகளில் புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டி கொள்ளையிடும் செயலிலும் மாணவர்கள் ஈடுபடுகின்றனர்.
சர்ச் தெருவை பொறுத்தமட்டில் பாதுகாப்பானது அல்ல எனவும், மாணவர்கள் கத்தியுடன் காணப்படுவது உண்மையில் அச்சத்தை ஏற்படுத்துவதாக கடை ஒன்றை நடத்தும் 38 வயது நபர் ஒருவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
Image: Facundo Arrizabalaga
கடந்த ஓராண்டாக சர்ச் தெரு பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகவே உள்ளது எனவும், பொலிசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டால் மட்டுமே தீர்வு கிடைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்ச் தெருவில் மோதல் வெடிக்காத நாள் மிகவும் குறைவு எனவும், வாடிக்கையாளர்கள் அச்சத்துடனே கடைகளுக்கு செல்வதாகவும், கடை உரிமையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சர்ச் தெரு மற்றும் எல்ம்வுட் சாலை சம்பவங்கள் தொடர்பில் கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும்,
இரண்டு சம்பவங்களுக்கும் தொடர்பு இருப்பதாக தாங்கள் கருதவில்லை எனவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.