புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனோவால் பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். காரைக்கால் வேளாண் கல்லூரி, ஆராய்ச்சி நிலையம் பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்படும். தேசிய அளவில் நட்சத்திர அந்தஸ்து பெற்றதால் பல்கலை. ஆக தரம் உயர்த்தப்படும் என்று அமைச்சர் கூறினார்.
