மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் உள்ள கடற்கரை சந்திப்பில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக நடுரோட்டில் நின்றபடி காதல் ஜோடி கட்டிப்பிடித்து கொண்டு இருந்ததால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைக்கண்டு திகைத்துப்போன பொது மக்கள் ஆச்சரியத்தில் தங்களின் செல்போன்களில் படம் பிடித்தனர்.
இந்நிலையில், போக்குவரத்து பாதிக்கப்பட்டதை அறிந்த போக்குவரத்து போலீசார் அங்கு விரைந்து வந்து ஜோடியை அப்புறப்படுத்த முற்பட்டார். பின்னர் அங்கு மக்கள் கூடியதை அடுத்து நடப்பதை அறிந்த காதல் ஜோடி சுயநினைவுக்கு வந்து விலகினர். காதல் ஜோடியின் இந்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், இம்ரான் என்ற நபர், “இது ஒரு படப்பிடிப்பு” என்று கூறியுள்ளார். சுபி என்பவர், பொது வெளியில் இப்படியா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
”அவர்கள் இந்தியாவை மேற்கத்திய நாடாக மாற்ற முயல்கிறார்கள், மாற்றம் வரவேண்டும் என்பது நல்ல விஷயம், ஆனால் போக்குவரத்தை நிறுத்தி பொதுமக்களுக்கு இடையூறு செய்வது நல்லதல்ல” என்று சத்யன் என்ற நபர் கருத்து தெரிவித்து உள்ளார்.