ஆயுஷ்மான் பாரத் 2.0: ரேஷன் கார்டு, விவசாயிகளுக்கான பிரதம மந்திரி கிசான் யோஜனா திட்டம், ஆயுஷ்மான் பாரத் உள்ளிட்ட பல திட்டங்களை ஏழைகள் மற்றும் விவசாயிகளுக்காக மோடி அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக நடுத்தரக் குடும்பங்களுக்கு இப்போது புதிய பரிசை அரசு அளிக்கவுள்ளது. இது ஆயுஷ்மான் பாரத் 2.0 என அழைக்கப்படும். இதில், நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு (மிடிள் கிளாஸ் குடும்பங்கள்) காப்பீடு வசதி வழங்கப்படும். இதன் மூலம், நாட்டின் சுமார் 40 கோடி மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெவ்வேறு முறைகள் பரிசீலிக்கப்படுகின்றன
தற்போது செயல்படுத்தப்பட்ட ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் வழியில் ‘ஆயுஷ்மான் பாரத் 2.0’ செயல்படுத்துவதில் உள்ள செலவுகள் மற்றும் சவால்களை மனதில் வைத்து இதற்கான பல்வேறு வகைகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த விதி அமல்படுத்தப்பட்டால், வருமான வரியில் அரசு அளித்துள்ள நிவாரணத்துக்குப் பிறகு, பெரும் பிரிவினருக்கு அரசின் இரண்டாவது பெரிய பரிசாக இது அமையும். இந்த திட்டத்தின் மூலம், வரி செலுத்தும் சம்பள வர்க்கத்திற்கு மிகப்பெரிய நன்மை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2018 ஆம் ஆண்டு இத்திட்டத்தை அரசு தொடங்கியது
புதிய ‘ஆயுஷ்மான் பாரத் 2.0’ திட்டத்தில் ரூ.5 லட்சம் காப்பீடு வழங்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக ஊடக அறிக்கைகள் கூறுகின்றன. தனிநபர் டாப்-அப் அடிப்படையில் இந்த திட்டத்தை கொண்டு வருவது குறித்து ஆராயப்பட்டு வருகிறது. இது தவிர மற்றொரு முறையும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. சுகாதார காப்பீட்டு நிறுவனம் நடுத்தர வர்க்க குடும்பங்களுக்கு மலிவு விலையில் அடிப்படை சுகாதார பாதுகாப்பை வழங்குவது அந்த முறை. இது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகின்றது.
2018-ம் ஆண்டு பட்ஜெட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இதன் மூலம், நாட்டின் 10 கோடி குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் மூலம் யாருக்கு பலன் கிடைக்கிறது?
மோடி அரசால் தொடங்கப்பட்ட லட்சியத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில், வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் குடும்பங்கள் பயன் பெறுகின்றன. ஏழை மற்றும் ஆதரவற்ற குடும்பத்தில் ஒருவர் நோய்வாய்ப்பட்டால் ஏற்படும் செலவுகளுக்கு உதவுவதும், தரமான சிகிச்சை அளிப்பதும்தான் இந்தத் திட்டத்தைத் தொடங்குவதன் பின்னணியில் உள்ள அரசின் நோக்கமாகும். இத்திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை சிகிச்சை பெறும் வசதியைப் பெறுகிறது.