கர்நாடகாவில் காங்கிரஸ் பேரணியின் போது அக்கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் 500 ரூபாய் நோட்டுகளை வீசிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
கர்நாடக சட்டப்பேரவைக்கு மே மாதம் 10ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஆனால் தேர்தல் அறிவுப்புக்கு முன்னரே அங்கு ஆளும் கட்சியான பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் வருவதால் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி கர்நாடகா செல்கிறார்.
கடந்த இரண்டு மாத காலத்தில் பிரதமர் கர்நாடகாவில் பல நலத்திட்டங்களை திறந்து வைத்துள்ளார். மேலும் பாஜக தரப்பில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பலரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதே நேரத்தில் இழந்த ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்ற நோக்கில் காங்கிரஸ் கட்சி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணாவில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற வாகன பரப்புரையில் அக்கட்சியின் மாநில தலைவர் சிவக்குமார் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தார்.
அப்போது, அவர் பொதுமக்கள் மீது 500 ரூபாய் நோட்டுகளை வீசி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
newstm.in