வரி கட்டவில்லை என்றால், பொதுவெளியில் (சமூகவலைத்தளங்கள், நாளிதழ்..,) பெயர் விவரங்களை வெளியிடுவோம் என்று, கோவை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
சொத்துவரி உள்ளிட்ட வரிகளை செலுத்துவது தொடர்பாக கோயம்புத்தூர் மாநகராட்சி விடுத்துள்ள எச்சரிக்கை செய்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
“கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு செலுத்தப்பட வேண்டிய வேண்டிய சொத்துவரி, காலியிடவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம் மற்றும் வரியில்லா இனங்களில் அதிக தொகை நிலுவை வைத்துள்ளவர்கள்,
வரும் 31.03.2023க்குள் நிலுவை தொகைகளை செலுத்துமாறு அறிவிக்கப்படுகிறார்கள்.
தவறும்பட்சத்தில் அதிகமான நிலுவை தொகை வைத்துள்ள நபர்களின் பெயர், நிலுவை தொகை உள்ளிட்ட விபரங்கள் தினசரி நாளிதழ்களிலும் மற்றும் சமூக வலைதளங்களிலும் வெளியிடப்படும் என இறுதியாக அறிவிக்கப்படுகிறது.”
இத்தகவலை மாநகராட்சி ஆணையாளர் மு. பிரதாப் அவர்கள் தெரிவிக்கின்றார்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.