14 வருடங்களாக வேலை நேரத்தில் புகை பிடித்த ஊழியருக்கு மொத்தமாக அபராதம் விதித்த அரசு!


ஜப்பானிய அரசு ஊழியர் ஒருவர் தொடர்ந்து 14 ஆண்டுகளாக புகை பிடித்தற்காக மொத்தமாக அவருக்கு $11000 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சிக்கிய ஊழியர்

ஜப்பானிய அரசு ஊழியர் ஒருவர் 14 ஆண்டுகளில் 4,500 முறைக்கு மேல் புகைபிடித்ததற்காக சமீபத்தில் சிக்கலில் சிக்கியுள்ளார்.

வேலை நேரத்தில் சிகரெட் பற்றவைத்ததற்காக அவருக்கு சுமார் $11,000 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

14 வருடங்களாக வேலை நேரத்தில் புகை பிடித்த ஊழியருக்கு மொத்தமாக அபராதம் விதித்த அரசு! | Japanese Employee Fined 11000 For Taking Smoke@getty images

தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸின் அறிக்கையின்படி, ஒசாகாவில் உள்ள அதிகாரிகள் 61 வயதான ஊழியர் மீதும் மீண்டும் மீண்டும் புகைபிடித்ததற்காக ஆறு மாதங்களுக்கு 10 சதவீத ஊதியத்தை குறைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

எச்சரித்த அரசு

ஒசாகாவில் உலகிலேயே கடுமையான புகைபிடித்தல் சட்டங்கள் உள்ளன. 2008 ஆம் ஆண்டில் அலுவலகம் மற்றும் பொது இடங்கள் உட்பட அரசு வளாகங்களில் சிகரெட் புகைப்பதற்கு முழுமையான தடையை அறிமுகப்படுத்தியது.

14 வருடங்களாக வேலை நேரத்தில் புகை பிடித்த ஊழியருக்கு மொத்தமாக அபராதம் விதித்த அரசு! | Japanese Employee Fined 11000 For Taking Smoke@udayavani

2019 ஆம் ஆண்டில் அரசு ஊழியர்கள் வேலை நேரத்தில் புகைபிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

61 வயதான அரசு ஊழியர் பொதுச் சேவைச் சட்டத்தின் கீழ் வீதியை மீறியதாகக் கருதப்பட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிக்கை கூறியுள்ளது.

14 வருடங்களாக வேலை நேரத்தில் புகை பிடித்த ஊழியருக்கு மொத்தமாக அபராதம் விதித்த அரசு! | Japanese Employee Fined 11000 For Taking Smoke@afp

அந்த நபரின் ஒழுங்குமுறை ஊதியக் குறைப்புக்கு கூடுதலாக, அவரது சம்பளத்தில் $11000 டொலர் திரும்ப கேட்கப்பட்டுள்ளது.

அந்த நபர் கடந்த 14 ஆண்டுகளில் 355 மணி நேரத்தில் புகைபிடித்ததாக ஓசாகா மாகாண அரசு தெரிவித்துள்ளது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.